தேவைக்கேற்ப தெரிவு செய்வோம்!!
மாஸ்லோவின் தேவைக் கோட்பாட்பின் அடிப்படையில் மனிதனுக்கு பல்வேறு தேவைகள் காணப்படுகின்றன என்பது வகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. இன்று சமூகம் எதிர்நோக்கியிருக்கும் இந்த இக்கட்டான கொரோனா தொற்றுநோய் சூழலில், எமக்கு கட்டாயம் என்ன தேவை என்பது நன்றாக உணர்த்தப்பட்டுள்ளது.
இதுநாள் வரையில் சாதாரண ஒரு நிகழ்வு என்றாலும் ஆடை அணிகலன்களும் ஒப்பனை அலங்காரங்களும், விடுமுறை என்றதும் நண்பர்களுடன் சுற்றுலாக்களும், ஆடம்பரமான கொண்டாட்டங்களும், ஆரோக்கியம் மறந்த துரித உணவுகளும், பெண்கள் என்றால் அழகுநிலையங்களும், ஆண்கள் என்றால் மதுபானசாலைகளும் எம்மை எந்தளவு ஆட்சி செய்தது என்பது புரிகிறதா? இன்று அவை எதுவும் இல்லாமல் நீங்கள் வாழவில்லையா?
அப்படியென்றால் உண்மையில் நமக்கு என்னதான் தேவை? உறங்க ஒரு இடமும், மூன்று வேலை உணவும், பருக சுத்தமான நீரும், ஆறுதலாக தோள்கொடுக்க அன்பான குடும்பமும் தானே இப்போது தேவைப்படுகிறது. இருந்தும் இன்னமும் நாம் சுயநலவாதிகளாகவே இருக்கின்றோம் என்பதே வேதனை.
எதிர்காலத்தில் தேவைப்படும் என்பதற்காக இப்போதே பொருட்களை அள்ளி அள்ளி சேமித்து எத்தனை நாட்களுக்குத் தான் வைத்துக்கொள்ள முடியும்? எனக்கு அடுத்து இருக்கும் மனிதன் எதை உண்பான் என்ற சிந்தனை சற்றும் இல்லாமல் எங்கள் வீடுகளில் பொருட்கள் நிரப்பமாக காணப்பட்டால் போதும் என்ற மனநிலை வேட்டையாடும் மிருகத்தின் மனநிலையைவிட கொடியது.
“நான் மிச்சம் வைத்தால்தான் மற்றவனுக்கு இருக்குமா? அப்படியென்றால் என் வீட்டு தேவையை எப்படி பூர்த்திசெய்வது?” இப்படி பல கேள்விகளை நீங்கள் கேட்கலாம், ஆனால் உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப்பாருங்கள், உங்கள் வீட்டில் மதியம் சமைத்த உணவை நீங்கள் அனைவரும் பகிர்ந்து தானே சாப்பிடுவீர்கள். ஒருவர் அல்லது இருவர் தன் பசி தீர்ந்தால் போதும் என்று சமைத்த உணவை அவர்களே சாப்பிட்டுவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும்? இதே நிலை தான் இன்று எம் சமூகத்திலும் காணப்படுகிறது. இருப்பதை சகமனிதனுடன் பகிர்ந்து உண்ணும் மனப்பாண்மை இல்லாமையே எங்களுடைய இன்றைய இந்த நிலைக்கு காரணம்.
கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் அதனை உண்டு உயிர்வாழ முடியாது என்பது கொரோனா தந்த பாடம். இனியாவது மனிதம் எம்முள் மலரச்செய்வோம். எங்களுடைய தேவைக்கு ஏற்ப மாத்திரம் தெரிவு செய்வோம்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.