ஜனாதிபதிக்கு எதிராக கூட்டமைப்பு அறிக்கை!
அண்மைக்காலங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சி சார் நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதையும், பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை முன்னெடுப்பதையும் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் இந்த மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை, சர்வதேசத்துக்கு அறிவிக்கும் திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக மேலும் கூறினார்.
ஜனாதிபதியால் அண்மையில் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் எவ்வித சிறுபான்மையினத்தவரையும் உள்வாங்காமல் இராணுவ அதிகாரிகளை முக்கியமாக உள்வாங்கி உருவாக்கப்பட்டிருந்தது. அவ்வாறே கிழக்கிலும் தொல்பொருள் பாதுகாப்புக்கான ஜனாதிபதி செயலணியில் பிக்குகளும், இராணுவ அதிகாரிகளும் உள்ளடக்கப்பட்டனர்.