ரூ.213 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட அரிதான வைர மோதிரம்!
ஹாங்காங்கில் மிக மிக அரிதான வைர மோதிரம் ஒன்று 213 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது.
தி சாகுரா என பெயரிடப்பட்டுள்ள 15புள்ளி81 கேரட் ஊதா இளஞ்சிவப்பு நிறத்திலான வைர மோதிரம், கிறிஸ்டிஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில், 29.3 மில்லியன் டாலருக்கு விலை போனது. இதற்கு முன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஏலத்தில் 14.8 கேரட் ஊதா இளஞ்சிவப்பு வைரம் 196 கோடி ரூபாய்க்கு விலை போனது.
இந்த சாதனையை முறியடித்து தற்போது சாகுரா வைரம் 213 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.