யாழில் கச்சான் விற்பவர்களையும் விட்டுவைக்காத கள்ளர்கள்!
நல்லூர் ஆலய சூழலில் வாழ்வாதாரத்திற்காக கச்சான் விற்பவர்களையும் இரும்புத் திருடர்கள் விட்டு வைக்கவில்லை எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.
நல்லூர் கந்தன் ஆலயத்தின் தெற்கு வீதியிலே இரு மூதாட்டிகளும் ஓர் பெண்மணியும் நீண்டகாலமாக கச்சான் விற்பனை செய்தே வாழ்வாதாரத்தை நடாத்தி வருகின்றனர். இவ்வாறு கச்சான் விற்பனை செய்பவர்கள் அருகில் உள்ள வங்கி ஒன்றின் முன்பாக உள்ள காணியிலேயே தமது கதிரை மேசையை வைத்துச் செல்வது வழமையாகும்.
இந்த நிலையிலே கடந்தவாரம் பயணத்தடை உள்ளிட்ட காரணங்களால் கச்சான் விற்பனையில் ஈடுபடாது நேற்றைய தினம் விற்பனைக்கு வந்தபோது மேசை கதிரைகளில் இருந்த பலகைகள் தூக்கி வீசப்பட்டு இரும்புகள் பிளாஸ்ரிக் மட்டும் களவாடப்பட்டுள்ளது.
இவ்வாறு களவாடப்பட்ட தளபாடங்களின் பெறுமதி 10 ஆயிரத்தில் இருந்து 13 ஆயிரம் ரூபா பெறுமதியிலானது என்றும் இதனால் தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக ஓர் கச்சணை விற்பனையாளர் கவலை தெரிவித்தார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.