இதுவரை 5 சிறுவர்கள் கொரோனாவினால் பலி!
நாட்டில் கொவிட் தொற்றினால் 1,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 5 பேர் கொவிட் தொற்றினால் மரணித்துள்ளதாக சிறுவர் நோயியல் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதனால் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது மிக முக்கியமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சிறுவர்களுக்கு இடையில் கொவிட் தொற்று வேகமாக பரவும் அபாயம் இருப்பதனால் அவர்களை பாதுகாப்பதற்காக கொவிட் தடுப்பூசி வழங்குவது மிக அவசியம் என அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
அத்துடன், சில நாடுகளில் சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார் .
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.