நாளை முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அமுலாகும் முழுநேர பயணத்தடை!
நாடளாவிய ரீதியில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து மீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்டதை போன்று இந்த நடமாட்ட கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வீட்டிலிருந்து வெளியேற முடியாது என இராணுவ தளபதி குறிப்பிட்டார்.
இதேவேளை பயணத்தடை காரணமாக நாளைமுதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் பேலியகொடை மெனிங் சந்தை ஆகியவற்றையும் மீளத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவற்றை மீண்டும் 22 ஆம் திகதி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.