மரத்தில் வீடு கட்டி தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்ட மாணவன் – காரணம்?
குடும்பத்தை சேர்ந்த 4 உறுப்பினர்களுடன் ஒற்றை அறையுடன் கூடிய வீட்டில் வசித்துவரும் சிவாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வீட்டிலேயே சிவா தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் அவரை அறிவுறுத்தினர். ஆனால் அதற்கான வசதி அவரது வீட்டில் இல்லை.
தங்களுடைய வீட்டில் ஒரே ஒரு அறை மட்டும் உள்ளதால் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்பட்டு விடும் என்று அஞ்சிய சிவா, தன்னுடைய வீட்டின் முன் இருக்கும் உயரமான மரத்தில் தனிமைப்பட முடிவு செய்தார். மரத்தில் மூங்கில் மூலம் தங்குமிடமொன்றை அமைத்து, அதில் தன்னைத் தனிமைப் படுத்தி கொண்டிருக்கிறார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.