சீன விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது!
செவ்வாய்க் கிரகத்தில், சீனா விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. சீன அரச ஊடகத்தை மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
ஜுரொங் (Zhurong) என இந்த விண்கலத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக, செவ்வாய்க் கிரகத்தில் ரோவர் விண்கலத்தை தரையிறக்கிய இரண்டாவது நாடாக சீனா பதிவாகியுள்ளது.
ஜுரொங் என்பது நெருப்பின் கடவுள் என பொருள்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பு சுற்றுப்பாதையை சென்றடைந்திருந்த நிலையில், அது வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பூமிக்கும் செவ்வாய்க் கிரகத்திற்கும் இடையிலான தற்போதைய தூரம், 320 மில்லியன் கிலோமீற்றர்களாகும். அதாவது, வானலை தகவல்கள் பூமியை வந்தடைய 18 நிமிடங்கள் எடுக்கும்.
செவ்வாய்க் கிரகத்தில் ஒரு நாள் அல்லது சோல் எனப்படுவது 24 மணித்தியாலங்களும் 39 நிமிடங்களுமாகும்.
இந்த நிலையில், ஜுரொங் விண்கலம், செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதால், குறைந்தப்பட்சம் 90 செவ்வாய் நாட்களில், அதிலிருந்து தகவல்களைப்பெற விஞ்ஞானிகள் முயற்சிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.