யாழில் திருமண நிகழ்வில் பங்குகொண்ட 21 பேருக்கு கொரொனா!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட தையிட்டியில் திருமண நிகழ்வு ஒன்றில் பங்குகொண்ட 21 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 74 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.