பாடசாலைகள் மீள ஆரம்பித்தல் தொடர்பில் அமைச்சர் கருத்து
கோரோனோ நோய்த்தொற்று காரணமாக செயற்படாமலிருந்த சகல அரச அலுவலகங்களும் மீள இயங்க ஆரம்பித்த நிலையில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.
இந்நிலையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் ஆனி 10ம் திகதிக்குள் தீர்மானமொன்றை எடுக்கும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும கூறியுள்ளார்.
ஏற்கனவே கல்வி அமைச்சு அதிகாரிகள், சுகாதார அமைச்சு அதிகாரிகள் பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திவந்த போதும் இறுதிதிகதி தொடர்பாக எவ்வித முடிவுகளும் இதுவரை எட்டப்படவில்லை என மேலும் தெரிவித்திருந்தார்.