fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

உனக்கு 20 எனக்கு 52! இலங்கையில் பேஸ்புக் காதல் கூத்து!!

20 வயதான அழகிய இளம் யுவதியொருவர் தனது தொலைபேசி காதலனுடன் வாழ்வதற்காக வீட்டைவிட்டு ஓடிச் சென்றவர், காதலனின் வீட்டிற்கு சென்றதும் 119 அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு தப்பிப்பிழைத்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகக்கவசம் அணிந்தபடி யுவதியை வீட்டிற்கு அழைத்து சென்ற தொலைபேசி காதலன், முகக்கவசத்தை அகற்றியதும் வயோதிபர் என்பது தெரிய வந்ததை தொடர்ந்தே இந்த களேபரம் இடம்பெற்றது.

பேஸ்புக் காதலனும், காதலியும் அரணாயக்க பொலிசாரால் பொறுப்பேற்கப்பட்டனர். யுவதி தனது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

நிலச்சரிவில் தனது மனைவி, இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த 52 வயதான நபரே இந்த மன்மத வித்தையை காண்பித்துள்ளார்.

கேகாலை மாவட்டத்தின், வசந்தகமவில் உள்ள செனேக சியபத கிராமத்தில் அவர் தற்போது தனியாக வசித்து வந்தார்.

பேஸ்புக் வழியாக அறிமுகமான யுவதியொருவருடன் கடந்த ஆறு மாதமாக காதல் வசப்பட்டுள்ளார். தன்னை இளைஞனாக காண்பித்து பேஸ்புக் காதலியுடன் கடலை போட்டு வந்தார்.

கந்தளாய், அக்போபுர பகுதியை சேர்ந்த 20 வயதான அந்த யுவதியும், இளைஞன் ஒருவரை காதலிப்பதாக நினைத்து உருகி உருகி காதலித்துள்ளார்.

காதல் முற்றியதும், அந்த யுவதியை தன்னுடன் வாழ வருமாறு காதலன் அழைத்தார். யுவதி வீட்டை விட்டு வெளியேறி வந்தால், இருவரும் தனித்து வாழலாமென்றும் யோசனை சொல்லியிருந்தார்.

இதையடுத்து, கடந்த 11ஆம் திகதி இரவு தனது வீட்டிற்கு தெரியாமல் யுவதி வெளியேறினார். வீட்டிலிருந்த நகைகளையும் எடுத்துக் கொண்டு அப்போபுர பேருந்து நிலையத்திற்கு சென்றார்.

குறிப்பிட்ட நேரத்தில் பேஸ்புக் காதலனும் பேருந்து நிலையத்திற்கு சென்றார். அந்த நேரத்தில் பேருந்து நிலையத்தில் போதுமான வெளிச்சமிருக்கவில்லை. எனினும், தொலைபேசி அழைப்பின் மூலம் இருவரும் சந்தித்து, அவசரஅவசரமாக மாவனெல்லைக்கு பேருந்தில் ஏறினர்.

தனது பேஸ்புக் காதலனின் முகத்தை பார்க்க வேண்டுமென்ற துடிப்பு யுவதிக்கு இருந்தாலும், காதலன் முகக்கவசம் அணிந்திருந்ததால் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை.

பேருந்தில் மாவனெல்லைக்கு சென்றவர்கள், வேறொரு வாகனத்தில் வசந்தகம சென்றனர்.

தனது காதலனின் வீட்டிற்கு வந்தபின் காதலன் முகக்கவசத்தை அகற்றும் போது, ​​தன்னை விட வயதான ஒருவரால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து யுவதி அழுததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

யுவதி தனது பெற்றோருக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியதுடன், 119 அவசர இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி தகவல் தெரிவித்தார்.

உடனடியாக அந்த வீட்டை முற்றுகையிட்ட அரணாயக்க பொலிசார், 52 வயது பேஸ்புக் காதலனை கைது செய்தனர். யுவதியையும் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

பின்னர் யுவதியின் பெற்றோர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு, யுவதி ஒப்படைக்கப்பட்டார்.

எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button