சிறைச்சாலைக்குள் போடப்படும் “ஸ்கெட்ச்” தொடர்பில் ஜனாதிபதி கருத்து
சிறைச்சாலைக்குள் இருந்து திட்டமிடப்படும் சகல குற்றங்களும் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிறைச்சாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
சிறைச்சாலைக்குள் இடம்பெறும் மொபைல் போன் பாவனையையும் முற்றாக கட்டுப்படுத்துமாறும் மேலும் கூறினார். நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிறை அலுவலர்களுடனான மீளாய்வு கூட்டத்தில் இதனை வலியுறுத்தியுள்ளார்.