யாழ்ப்பாணத்தில் இறந்த 7 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம்!
யாப்பாணம் பருத்துறை- சாரையடி பகுதியில் 07 வயதான சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சம்பவத்தில் மந்திகை சாரையடி(மதுவரி திணைக்களத்திற்கு பக்கத்து ஒழுங்கை) ஸ்ரீதரன் கம்சி (வயது 9) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் சிறுமி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.
அதன்பின்னர் மீண்டும் பெற்றோர் வீட்டுக்கு திரும்பிவந்து பார்த்தபோது சிறுமி துாக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாக பருத்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட முறையில் கடுமையான சந்தேகம் தெரிவித்துள்ள பொலிஸார் பிரேத பரிசோதனை அறிக்கையினை எதிர்பார்த்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த சிறுமியின் அருகில் யூஸ் பை ஒரு பகுதி இருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவராஜா விசாரணைகளை முன்னெடுத்தார்.
உடற்கூற்றுப் பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி சுதேவா முன்னெடுத்தார்.
கழுத்தில் பாடசாலை பட்டி இறுகிக் கொண்டதால் சிறுமி உயிரிழந்தார் என உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.