fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

பயணிகள் கவனத்திற்கு – ஒரு பக்க கதை

மாலைப் பொழுதில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஓர் பாதையில், யன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தவளாய் மனதை மயக்கும் இசைஞானியின் இசையோடு பயணித்திக்கொண்டிருந்தேன். இருக்கைகள் பல வெருமையாக இருந்தன. நான் எப்படியும் இன்னும் ஒரு அரை மணித்தியாலயம் பயணிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு யன்னலூடாக இயற்கையை இரசித்தேன்.

அப்போது காற்றோடு ஒரு குரல் இதமாக வந்து என் காது கடித்தது. 
” இன்று இப்படி வெருமையாக இருக்கும் இந்த இருக்கைகள் வழமையாக ஒவ்வொரு நாளும் பயணிகளால் நிரம்பிக்கிடக்கும். சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், கர்ப்பினித் தாய்மார்கள், வேலைக்கு செல்வோர், மதகுருக்கள், வயதானோர் முதல் திருடர்கள் வரை இந்த பேருந்தில் பயணிப்பர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை, என்னுள் பயணிக்கும்போது
பலவிதமான சோகங்களையும் சுகமான நினைவுகளையும் பலர் கதைப்பர். இன்னும் சிலர் இருக்கைகளில் சாய்தபடி கண்ணீர் வடிப்பர், வேறு சிலர் பேருந்து பயண நண்பர்களாகி அழகிய நட்புணர்வை பகிர்ந்துகொள்வர். இவற்றை பார்க்கும் போது ஒருவருடைய வாழ்வில் பேருந்தாகிய நான் எந்தளவு முக்கியமானவனாக உள்ளேன் என்று எண்ணி பெருமிதம் கொள்வேன்.

ஆனால், இந்த இனிமையான செயல்களுக்கு மத்தியில் பலர் மரிதையாக நடந்துகொண்டாலும் வேறு சிலர் ஏன் இவ்வளவு இழிவாக நடந்துகொள்கின்றனர் என்று எனக்கு கடும் கோபம் வரும். முக்கியமாக காதலர்கள் என்ற போர்வையில் பாடசாலை மாணவர்கள் நடந்துகொள்ளும் விதம், சனநெரிசல் வேளைகளில் நின்றுகொண்டு வரும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், பைகளை திருடர்களிடம் பரிகொடுத்தோரின் அவலநிலை இவற்றையெல்லாம் பார்க்கும் போது ஏன் இந்த மனிதர்கள் சுயநினைவை இழந்து செயற்படுகின்றார்கள் என்ற ஆதங்கம் எனக்குள் எழும்.”

என்றவாறு, காதைக்கடித்த குரல் காற்றோடு கலந்தது. உண்மைதான், சுற்றி இருப்பவர்களின் பார்வை கவனிக்கின்றது என்பதை மறந்தவர்களாய் தான் இன்று பலரின் செயற்பாடுகள் அமைகிறது. பேருந்து பயணம் என்ற சிலமணி நேரமே பலரால் நாம் கவனிக்கப்படும் போது, வாழ்க்கைப் பயணத்தில் நாம் செய்யும் தவறுகள் யாருக்குத் தெரியப் போகிறது என்று நினைக்க முடியுமா?

பேருந்து பயணம் சமூக செயற்பாடுகளின் வெளிப்பாடாகவே அமையும். ஏனெனில் சமூகத்தில் பல்வேறு குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களே பேருந்துகளில் பயணிக்கின்றனர். எனவே பயணிகளே இது உங்கள் கவனத்திற்கு. சிந்தித்து, சுயநினைவோடு பேருந்து பயணத்திலும் வாழ்க்கைப் பயணத்திலும் மகிழ்ச்சியோடு பயணிப்போம். 

இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    Back to top button