டியூஷன் வகுப்புக்கு சென்ற மாணவியை காணவில்லை!
தெனியாய – இந்துருதெனிய பிரதேசத்தில் வசிக்கும் மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார் என மாணவியின் பெற்றோர் காவல் துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மாத்தறை நகரிற்கு மேலதிக வகுப்பிற்காக சென்று தங்குமிடத்திற்கு திரும்பாத நிலையிலேயே குறித்த 17 வயது மாணவி காணாமல் போயுள்ளார்.
எனினும் இது தொடர்பில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்களிடம் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது,
குறித்த மாணவி வகுப்பு நிறைவடைந்து தங்குமிடத்திற்கு திரும்பிவிட்டார் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவி தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.