யாழ்ப்பாணத்தில் நூதனமுறையில் மோசடி!
இலங்கையில் மீண்டும் ஒரு “பிரமிட்” மோசடி வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நடக்கிறது.
முக்கியமாக மட்டக்களப்பு , யாழ்ப்பாண மாவட்டத்தில்;படித்த உத்தியோகத்தில் உள்ள பலர் இந்த மோசடியில் ஈடுபடுகிறார்கள்.இன்னும் ஒரு சிலர் “சமூகசேவை செய்யுறம்” எண்ட பேரில் புலம்பெயர் தேசங்களில் இருந்து பணத்தைப்பெற்று இப்படியான மோசடி நிதி நிறுவனங்களில்; முதலீடு செய்கிறார்கள்! தங்களின் “பிரபல்யத்தை” வைத்து இலகுவில் மற்றவர்களையும் இந்த வலைக்குள் வீழ்த்துகிறார்கள்.
இலங்கை ருபாயில் 10000 ரூபாய் செலுத்தி இணைந்துகொள்ளவேண்டும்.
50000 இல் இருந்து 2 லச்சம் வரை பணத்தை முதலீடு செய்கிறார்கள்.
காசை தனிப்பட்ட நபர்களின் வங்கி இலக்கத்துக்குத்தான் வைப்பில் இடுகிறார்கள்.
இவர்கள் செலுத்திய பணத்தை திருப்பி பெறுவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.
நாளாந்தம் 1℅ வரை போட்ட முதலில் இருந்து இலாபம் என்று சொல்லப்படுகிறது.
(இந்த லாபவீதம் 0.1 ஆகவும் இருக்கலாம். ஏன் என்று கேள்வி கேட்கமுடியாது)
திங்கள் தொடக்கம் வெள்ளி வரை இலாபம் வைப்பில் இடப்படும். சனி, ஞாயிறு கடை பூட்டு!
போட்ட பணம், நாளாந்த இலாபம் எல்லாம் “பிற்கொயின் bitcoin” ஆகத்தான் இருக்கும்.
இந்த bitcoin ஐ காசாக மாற்ற எந்த வழியும் இல்லை!
உதாரணத்துக்கு 50000 ஐ கொடுத்த ஒருவருக்கு தான் கொடுத்த பணத்தை திருப்பி எடுக்க 3 தொடக்கம் 5 வருடம் ஆகலாம்.
அதுகும் பிச்சுப்பிச்சு அந்தப்பணம் அவரது கைக்கு வந்து சேர பல சிக்கல்கள் உள்ளது.
Bitcoin ஐ காசாக மாற்றும் வழிகள் இலங்கையில் இல்லை.
இந்த “மோசடியை” சமூகத்தின் காவல் நாய்களான பிரதான செய்தி ஊடகங்கள் கண்டும் காணாமலும் இருக்கின்றன.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.