சுய இன்ப பழக்கத்தைத் தவிர்ப்பது எப்படி?
சுய இன்பப் பழக்கத்திலிருந்து விடுபடுதல் சித்ரவதையாக தோன்றலாம், ஆனால் இதற்கு வியப்பூட்டும் பலன்கள் கிடைத்தன.
கட்டுரையாசிரியர் தன் பெயரை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார்.
இந்த கட்டுரையில் வயது வந்தோருக்கான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
சுய இன்பத்தில் ஈடுபடாமல் விட்டு 13 மாதம் சாதனை படைத்துள்ளேன். அது அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால் என் வாழ்வு இதை விட சிறப்பாக இருந்ததில்லை.
சுய இன்பத்தில் ஈடுபடாமல் இருப்பதால் எனக்கு வியப்பூட்டும் அளவிற்கு நல்லது நடந்துள்ளது. என்னுடைய இருபதாவது வயதில் இப்பழக்கத்தை நான் சில வாரங்கள் விட்டுள்ளேன், சில நேரங்களில் சில மாதங்கள் இருந்துள்ளேன். நான் மட்டும் தனியே இல்லை. உலகெங்கும் லட்சக்கணக்கானோர் (பெரும்பாலும், ஆனால் ஆண்கள் மட்டும் அல்ல) “நோஃபேப்” என்ற இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர். இந்த இயக்கம் மக்களை சுய இன்பம் மற்றும் ஆபாச படங்கள் பார்ப்பதில் இருந்து விடுபட ஊக்கப்படுத்தும் இயக்கமாகும்.
தானாக ஒலியை பதிவு செய்த செக்ஸ் பொம்மை செயலியால் அதிர்ச்சி
`வீட்டு வாடகையாக செக்ஸ் மட்டும் போதும்!’
ஆபாசப்படங்களை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளை நான் 19 வயது முதற்கொண்டே யோசிக்கத் தொடங்கிவிட்டேன். என் தலைமுறையைச் சேர்ந்த மற்றவர்களைப்போல் தேவைப்படும்போதெல்லாம் ஆபாசப்படங்களை பார்க்க முடியும் என்ற நிலையில் நான் வளர்ந்தேன். எனக்கு 14 வயதாகும் போது நான் இன்டர்நெட்டில் ‘லிங்கரி’ என்ற சொல்லைத் தேடியது நினைவுக்கு வருகிறது. அங்கிருந்து தான் ஆபாசப் படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
என் பதின்ம வயதின் பிற்பகுதியில், நான் என் அறையில் தனியாக இருந்ததாலேயே நான் ஆபாசப்படங்களைப் பார்ப்பதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. நான் இதற்கு அடிமையாகிவிட்டேனோ என்று அஞ்சத் தொடங்கினேன். நான் ஏதோ இழந்துவருவதைப் போல உணர்ந்தேன். வாழ்வில் பெண்களை சந்திக்க முடியாதவன், இன்டர்நெட் துணையுடன் சுய இன்பத்தை தனியே அனுபவிக்கும் நிலையைக் கொண்டவன் போல் உணர்ந்தேன்.
19 வயதில் நான் ஒற்றையாக கன்னி கழியாமல்தான் இருந்தேன். என்னுடைய உறவுகள் தீவிரமடையவில்லை, பாலுறவு பற்றி அதிகம் தெரியாதவனாகத்தான் இருந்தேன். வீட்டில் தங்கி சுய இன்பத்தில் ஈடுபடுவது பாதுகாப்பானது என்றும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க முடியும் என்றும் நினைத்தேன். பெண்களுடன் சாட் செய்ய நான் முயற்சித்த போதெல்லாம், இரவில் அது பற்றி நினைக்காமல், நிர்வாணமான பெண்களின் படங்களைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இதை அவர்கள் மட்டும் அறிந்தால் என்னை எவ்வளவு கேவலமானவனாக நினைப்பார்கள் என்று உறுதியாக சொல்ல முடிந்தது.
பண்டைய குண்டலினி முறை
என் வாழ்வில் ஆபாசப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கவலைப்பட்டு இரவெல்லாம் உறங்காமல் தவித்த நாள்கள் உண்டு. இதுபற்றி நண்பர்களிடம் பேசியதில்லை- அந்தரங்கம் பற்றி எளிதாக பகிர்ந்து கொள்ளக் கூடிய நட்பு வட்டம் அல்ல எனது நண்பர்கள் வட்டம்.
என்னுடைய 20வது பிறந்த நாளைக்குப் பின், நான் அனைத்தையும் விட்டுவிட முடிவு செய்தேன். என் தாயார், ஆன்மிகத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் புத்தக அலமாரியை புரட்டியபோதே இது தெரிந்தது. அப்போதுதான் தியானம் பற்றி அறிந்து கொண்டேன். காமத்தை விலக்குதல் மூலம் என்னுடைய சக்தியை மேம்படுத்தி,தன்னம்பிக்கையை மீட்க முடியும் என்று நான் கண்டுபிடித்தேன். பண்டைய குண்டலினி முறைபோன்றது தான் இந்த யோசனை. இதுபற்றி என் தாயிடம் கேட்பதற்கு மிகவும் தயங்கினேன்., ஆனால் இதுபற்றி மேலும் கண்டறிய எண்ணினேன். இப்படித்தான் இது தொடங்கியது.
முதலில், என் வாழ்நாள் முழுவதும் சுயஇன்பப் பழக்கத்தை கைவிட்டுவிடுவது என்றுதான் எண்ணினேன். ஆனால் ஒருமாதம் வரைதான் என்னால் தாக்குபிடிக்க முடிந்தது என்பது எனக்கு ஏமாற்றத்தைத் தந்தது. எனவே நான் நடக்கக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்க விரும்பினேன்.
நோஃபேப் இயக்கம் 90 நாள் நோன்பு பற்றி பரிந்துரைக்கிறது. இன்டர்நெட் ஆபாசப்படங்களின் தாக்கம் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து டெட் சொற்பொழிவு ஒன்றிலிருந்து கேட்டறிந்தேன். ஆபாசப்படங்களை பார்ப்பது என்பது மிகவும் கடினமான போதைப் பொருளை எடுத்துக் கொள்வதற்கு சமமானது என்று இந்த சொற்பொழிவு கூறியது. அளவுக்கு அதிகமாக ஆபாசப்படங்களை பார்ப்பதால் இளைஞர்களுக்கு விறைப்புத் திறன் குறைந்து வருகிறது என்றும் சொன்னது. ஏராளமானோர் நோஃபேப் ஐ கடைபிடிப்பதற்கு காரணம், அவர்களுக்கு தங்கள் விறைப்புத் திறன் குறித்த பயம் தான். எனக்கு அந்த பயம் இல்லை என்பது வேறு விஷயம்.
மக்களின் முழுமையான ஆன்லைன் துணைக் கலாசாரம் குறித்து கண்டறிவது பெரும் ஆறுதல் அளிப்பதாக இருந்தது. நான் எப்போதுமே நான் செய்வது சரியானதுதான் என்று எண்ணியதுண்டு, ஏராளமானோர், ஆபாசப்படங்களைப் பார்த்து ஆரோக்கியமான உறவுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்றே நான் கருதினேன். ஆனால் சுய இன்பத்தின் கேடுகளால் நான் நினைத்ததை விட கூடுதல் ஆண்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்களோ என்று எண்ண வைத்தது.
நோஃபேப் இயக்கம்
நோஃபேப் இயக்கம் 2011 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ரெடிட் என்ற சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் அலெக்சாண்டர் ரோட்ஸ் என்பவர், ஒரு விவாத இழையைத் தொடங்கினார். சுய இன்பம் செய்யாமல் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து அவர் அதில் விளக்கினார். இந்த இழை வைரல் ஆனது. 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களானார்கள். “ஃபேப்ஸ்டிரானட்ஸ்” என்று இந்த இழையின் உறுப்பினர்கள் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். ஆபாசம் இல்லா வாழ்க்கை குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள அலெக்சாண்டர் இணையதளம் ஒன்றையும் தொடங்கினார்.
ஆபாசப்படம் பார்ப்பதால் தங்களுக்கு ஏற்பட்ட விறைப்புத் தன்மை இழப்பு குறைபாடு இந்த நோஃபேப் மூலம் சரியாகிவிட்டதாக ஏராளமானோர் நம்பத் தொடங்கினார்கள். என்னைப் பொறுத்தவரையில் நோஃபேப்பிங், எனக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது, தெளிவாக இருக்க உதவுகிறது, ஊக்கமளிக்கிறது என்று உணர்கிறேன். என் காமவெறி கட்டுக்குள் இருப்பது எனக்கு தெரிவதால் நான் ஆசுவாசமடைந்துள்ளேன், பெண்களுடன் நான் நன்றாக பேசுகிறேன்.
வறுமைக்கும், உயிருக்கும் இடையே ஊசலாடும் ரோஹிஞ்சா பெண்கள்
ஆரோக்கியமான செக்ஸ் ஆண்களின் ஆயுளை அதிகரிக்குமா?
சுய இன்பத்தில் ஈடுபடக்கூடாது என்றும் ஆபாசப்படங்களைப் பார்க்கக் கூடாது என்றும் எனக்கு நானே தடை விதித்துக் கொண்டுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக நான் இதை சாதித்துள்ளேன். முதல் வாரம் எப்போதும் போல் மிகவும் கடினமாக இருந்தது. பார்க்கும் அனைத்தும் காமத்தை நினைவு படுத்தின. அழகான பெண்ணை டிவியில் பார்த்தாலோ, யூடியூபில் பார்த்தாலோ எனக்கு விறைக்கும். சில நேரங்களில் என்னை ஒரு பெண் புறக்கணித்தபோது, எனக்கு சுய இன்பம் செய்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைத்ததுண்டு.
வேலையின் மீது கவனம்
ஒவ்வொரு முறை நான் தவறும்போதும், அதன் பின் சில நாட்களில் மிகவும் மோசமாக உணர்வேன். தோற்றுப் போனதற்காக, பலவீனமாக இருந்ததற்காக, கட்டுப்பாடு இல்லாமல் போனதற்காக என்னை நானே அடித்துக் கொண்டதுண்டு. என் மனப்போக்கினை நிலைப்படுத்த சில நாட்கள் பிடிக்கும். அதன் பின் மீண்டும் நான் என் உபவாசத்தைத் தொடருவதுண்டு.
சமீபத்தில் நோஃபேப் நோன்பு இருந்த ஒரு வருடம் என் பணிச்சுமை காரணமாக முடிவுக்கு வந்தது. பெரிய பணி ஒன்றை நிறைவு செய்து, தளர்ந்து போய், என்னை நானே இளைப்பாறிக்கொள்ள விரும்பியதுண்டு. யாருடனும் உறவில் இல்லை. என் குடியிருப்பு தோழர்கள் அறையில் இல்லையென்றால் செய்வதறியாமல் சோபாவில் முடங்கிப் போவதுண்டு.
இவ்வளவு நாள் உபவாசம் இருப்பதால் என் வேலையின் மீது கவனம் செலுத்த முடிந்தது. இப்போதெல்லாம், நான் என் அறையில் நீண்ட நேரம் தனிமையில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை பார்க்க முடிகிறது, சுய இன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதே இல்லை. நோஃபேப் இல்லாமல் என்னால் இதைச் செய்திருக்க முடியாது.
நான் மீண்டும் என் விரதத்தை தொடங்க உள்ளேன். என் சாதனையை மீண்டும் நானே உடைக்க எண்ணுகிறேன். இந்த முறை 18 மாதம் சுய இன்பத்தில் ஈடுபடாமல் ஆபாசப்படம் பார்க்காமல் இருக்கப் போகிறேன். என் நீண்டகால இலக்கு, சுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதுதான்.
உடல்நலம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS ல் பெறுவதற்கு உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.