ஒற்றைக் கோட்டின் (தலை)விதி – ஒரு பக்க கதை
மோட்டார் வண்டி ஓட்டிப் பழகும் ஆரம்ப காலகட்டம் அது. இருபக்கமும் மரங்களால் சூழ்ந்த, வாகன நெறிசல் இல்லாத அழகான பாதையில் மோட்டார் வண்டியை பழகிக்கிக் கொண்டிருந்த போது, வாகனம் முன்செல்லவதற்கு ஏதோ ஒன்று தடை செய்தது, என்னவாக இருக்கும் என்று வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கிப் பார்த்தால்,என்ன ஆச்சரியம் பாதையின் நடுவில் இருக்கும் ஒற்றைக்கோடு என்னைப் பார்த்தவாறு நின்றது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
அப்போது அந்த ஒற்றைக்கோடு என்னிடம் இப்படி சொல்ல ஆரம்பித்தது, “அன்பின் ஓட்டுனரே, நீங்கள் ஆரம்பத்தில் என்னவோ மிகவும் பத்திரமாகவும், வீதி சமிஞ்சைகளை கடைபிடிப்பவராகவும், வீதி விதிமுறைகளை பின்பற்றுபவர்களாகவும் தான் இருக்கின்றீர்கள் ஆனால் காலப்போக்கில் அவற்றை மறந்துவிடுகிறீர்களா அல்லது மறுத்துவிடுகிறீர்களா என்பது எனக்கு புரியவில்லை.
என்னைக் கண்டால் அந்த இடத்தில் என் மீது ஏறி ஏனைய வாகனங்களை முந்திச்செல்லக்கூடாது என்பது சட்டம் ஆனாலும் உங்களுக்கு ஏன் இவ்வளவு அவசரம்? உங்களின் மனப்பாண்மை எத்தகையதாய் உள்ளது என்பது இதிலிருந்தே தெரிகிறது. மற்றவர்களை முந்த வேண்டிய இடம் வாழ்க்கையே தவிர வீதியில் அல்ல.
வளைவுகளில் நான் இருக்கும் போதே நீங்கள் என் மீது ஏறி முந்தினால் அது எதிர் பக்கத்தில் வருபவருக்கும் ஆபத்தாய் முடியும் என்ற எண்ணம் கூட இல்லாத சுயநலவாதியாக வாழும் நீங்கள் பிறருக்கு எமனாகவே மாறுகிறீர்கள். பாதை என்பது பொதுவானது அதில் உங்கள் பக்கத்தை விட்டுத் தாண்டி அடுத்தவர் பக்கம் சென்று உங்கள் பாதுகாப்பை இழப்பது மட்டுமல்லாது பிறரின் பாதுகாப்பிற்கும் சவால் விடுக்கின்றீர்கள்.
அதிலும் சிறு குழந்தைகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு நீங்கள் செய்யும் அத்துமீறல்களை பார்க்கும் போது,” நல்ல வேளை நான் மனிதனாக பிறக்கவில்லை” என்று எண்ணத் தோன்றும்.
பஞ்சமா பாவங்களில் ஒன்றை செய்தால் மட்டும் தான் நான் பாவி என்று எண்ண வேண்டாம். பிறரின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து, ஒரு குடும்பத்தின் கண்ணீருக்கு காரணமாக மாறும் முந்திச்செல்லும் அவசரகுடுக்கைகளே நீங்களும் பாவிகள் தான். ” என்று சொல்லி விடைபெற்றது ஒற்றைக் கோடு.
அப்போது தான் நான் புரிந்து கொண்டேன், எங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்ளவே எமக்கு உரிமை இல்லாத போது மற்றவரின் விபத்திற்கு நாம் காரணமாக அமைவது கொலை செய்வதற்கு சமம் என்பதினை. விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் சட்டத்திற்காக என்பதினை தாண்டி அது எமது பாதுகாப்பிற்காக என்பதினை புரிந்து சமூக பொறுப்புடன் நடந்துகொள்வோம்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.