பாராளுமன்றில் கெத்து காட்டிய விக்னேஸ்வரன்! – முதல் உரையின் முழு விபரம்!
“வணக்கம் மாண்புமிகு சபாநாயகர் அவர்களே! தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் முதற்கண் என் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும் இந்த நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியுமாகிய எனது தாய் மொழியிலும் ஆரம்பித்து பின்னர் எல்லா மக்களையும் இணைக்கும் மொழியிலும் எனது வாழ்த்தினை கூறுகின்றேன். எமது பாராளுமன்ற பாரம்பரியத்தின் மிக உயர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளமைக்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். ” என்று பேசிய நீதியரசர் விக்னேஸ்வரன் சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட மகிந்த யாப்பா அபேவர்தன தனது நீண்ட அரசியல் பயணத்தின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ள அனுபவத்தை சபாநாயகர் பதவிக்கு நல்லமுறையில் பயன்படுத்துவார் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
இன்றைய அரசாங்கம் மிகவும் பலமான நிலையில் இருக்கிறது என்று சுட்டிக்காட்டி அதேபோல மறைந்த ஜே. ஆர். ஜெயவர்தனவின் கீழ் யானைப் பலத்துடன் 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை ஏற்படுத்தி இன்று ஒரே ஒரு உறுப்பினர் என அளவுக்கு அதன் பலம் சுருங்கிவிட்டதாக தனதுரையில் கோடிட்டு காட்டிய நீதியரசர் விக்னேஸ்வரன் அதே பிழையை தற்போதைய பொதுஜன பெரமுன அரசும் விட்டு அதே பாதையை தெரிவுசெய்யாது என்று நம்புவதாக கூறினார்.
“எமக்கு இப்பொழுது மிகவும் பலமான ஒரு அரசாங்கம் அமைந்துள்ளது. 1977 ஆம் ஆண்டு இதேமாதிரியான ஒரு அரசாங்கம் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் கீழ் இருந்தது. அந்த ஆட்சியின்போதே 1983 ஆம் ஆண்டு கலவரம் இடம்பெற்றது. அந்த காலத்து யானையாக இருந்து இன்று தனி ஒரு உறுப்பினராக குறுகிப்போயுள்ள பாதையை இந்த அரசாங்கமும் நிச்சயமாக எதிர்காலத்தில் தொடரக்கூடும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் நாம் விட்ட பிழைகளில் இருந்து பாடம் படித்து எல்லா சமூகங்களும் ஒருவருக்கு ஒருவர் மதிப்புடனும் சமனாகவும் உணருகின்றவகையிலும் இலங்கை தாய் நாட்டின் பிள்ளைகள் நாம் என்ற இறைமையுடனும் பெருமையுடனும் நடைபோடும் வகையிலுமான சமாதானமும் செழிப்பும் மிக்க ஒரு காலத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் நம்புகிறேன். ” என்று கூறினார்.
தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை பற்றி அழுத்தம் திருத்தமாக தனது உரையில் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
“குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையுடன் மரபு, பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் தேசம் என்று அங்கீகரிக்கப்படுவதன் பிரகாரம் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடைய வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த உரிமைகளை அங்கீகரிப்பதுடன் கடந்த காலம் பற்றிய தவறான வரலாற்று கண்ணோட்டங்களை களைந்தால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும் ” என்று கூறினார்.
சிங்கள மேலாதிக்க அதிகாரத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதையும் நீதியரசர் தனது இந்த உரையில் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.