கைலாஷா நாட்டுக்கு புதிய வங்கியை உருவாக்கும் நித்தியானந்தா!
கைலாச நாடு என விளையாட்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு நாட்டை உருவாக்கிக் கெத்து காட்டி கொண்டிருக்கிறார் நித்யானந்தா.ஒரு கட்டத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த நித்தியானந்தா, திடுதிப்பென ஆளே அட்ரஸ் இல்லாமல் காணாமல் போனார். இடையில் அவரைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியாகாமல் சமூக வலைதளங்கள் அலண்டு போய்விட்டன.
தற்போது அதிரடியாக மீண்டும் வந்துள்ளார் நித்யானந்தா. அதிகாரப்பூர்வமாக தனது கைலாசா நாட்டை உருவாக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் கைலாச நாட்டுக்கு எப்படி வர வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும், கைலாச நாடு எப்படி இருக்கும் என்பதையெல்லாம் தெரிவித்துள்ளார். நித்தியானந்தா கூறியதாவது, நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால் அதை நல்ல காரியங்களுக்கு செலவிட தனியாக வங்கி ஒன்றை உருவாக்கியுள்ளாராம்.
வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா என்ற வங்கியை தொடங்கியுள்ளதாகவும், அதற்கு தேவையான 300 பக்க அறிக்கையையும் உருவாக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். கைலாச நாட்டிற்கு தனியாக பணம் அச்சிடப்பட்டு விட்டது எனவும் விரைவில் அதை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார், மேலும் உள்நாட்டு செலவுக்கு ஒரு பணத்தையும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு தனி பணத்தையும் உருவாக்கியுள்ளாராம்.
மேலும் கைலாசாவின் ரிசர்வ் வங்கி அரசின் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் அடிபணிந்து தான் உருவாக்கியுள்ளதாகவும், சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்யப்படவில்லை எனவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான அடுத்தகட்ட அறிவிப்புகளை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட போவதாகவும் தெரிவித்துள்ளார்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.