யாழ்ப்பாணத்தில் இனம்தெரியாதோர் அட்டகாசம்!
பருத்தித்துறை தும்பளை பகுதியில் வாடி அமைத்து தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபடுவோரது நான்கு வாடிகள் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த கடலட்டை வாடியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் அண்மையில் தமது சொந்த இடமான சிலாவத்தை பகுதிக்கு தமது ஊர் தேவாலயம் ஒன்றின் திருநாளிற்க்காக சென்றிருந்ததாகவும் அவ்வாறு சென்றிருந்த போது தமது தொழில் உபகரணங்களை பாதுகாப்பாக ஒருவரது வீட்டில் பாதுகாப்பிற்க்காக வைத்துச் சென்றுள்ள நிலையிலேயே இத் தீக்கிரையாக்கும் சம்பவம் இடம் பெற்றிருக்கிறது.
இது தொடர்பில் பருத்தித்துறை போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.