நிபந்தனையற்ற நிதியுதவிகளை எதிர்பார்க்கின்றோம்- ஜனாதிபதி
COVID 19 க்கு பின்னரான அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகளிடம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ நிதி உதவி தொடர்பாக கோரிக்கைவிடுத்துள்ளார். மேலும் மத்திய வருமான பொருளாதாரத்தை கொண்ட நாடுகளுக்கு சர்வதேச முகவர் நிறுவனங்களும், உலக தலைவர்களும் தேவையான ஆதரவை வழங்குமாறும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிக்க முடியும் எனவும் கூறினார்.
‘High – Level Event on Financing for Development in the Era of COVID – 19 and beyond’ என்ற தலைப்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் டூரூடோ(Justin Trudeau), ஜமைக்கா பிரதமர், ஐக்கியநாடுகளின் பொதுச்செயலாளர் ஆகியோரால் ஒழுங்குபடுத்தப்பட்ட வீடியோ மாநாட்டில் ஜனாதிபதியால் மேற்குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டது.