உருகும் மெழுகுவர்த்தி – ஒரு பக்க கதை
இதமான இரவுப்பொழுது,லேசான மழையை இரசித்தவளாய் யன்னல் ஓரத்தில் தேனீர் கோப்பையுடன் அமர்ந்திருந்தேன். சட்டென மின்னல் வெளிச்சம் வந்து மின்சாரத்தை கொண்டு சென்றுவிட்டது. அருகில் இருந்த மேசையில் பாதி எரிந்துமுடிந்த ஓர் மெழுகுவர்த்தியை கண்ட ஞாபகம்.
எதுவுமே தேவைப்படும் போது கிடைக்காது என்பது போல ஒழிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தியை சிறிது நேர தேடலின் பின் கண்டுபிடித்து என் இருளினை போக்கினேன். தன் தலையில் தீமூட்டியதும் அந்த மெழுகுவர்த்தி என்னைப் பார்த்து சொன்னது, ” நான் பிறந்ததே உருகத்தான், என் உடல் மெழுகால் ஆனது. பிறருக்கு ஒளி கொடுப்பதே எனது பணி. “தன்னைத் தானே அழித்துக்கொண்டு பிறருக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தியை போல உங்கள் வாழ்க்கை இருக்க வேண்டும்” என்று உங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அது ஒன்றும் அவ்வளவு சுலபமானது அல்ல. நான் உருகும் போது “எனக்கு வலிக்கிறது, என்னை தீமூட்டாதீர்கள்” என்ற கதறல் உங்களில் யாருக்காவது கேட்டதுண்டா? நீங்கள் இருளை விரட்ட என்னை பயன்படுத்துகிறிர்கள். அதுமட்டுமில்லாமல் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், விழா ஆரம்பத்தில் குத்துவிழக்கை ஏற்ற என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னை தேடுவீர்கள்.
ஏனைய நாட்களில் நான் தரையில் வீழ்ந்து கிடந்தாலும், குப்பையில் கிடந்தாலும் என்னைத் திரும்பிப் பார்க்கக்கூட ஒருவருக்கும் நேரம் இருக்காது. அப்போது தான் நினைத்தேன் இந்த மனிதர்கள் சகமனிதர்களையே சந்தர்ப்பத்திற்காக எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்தும் போது நான் மட்டும் என்ன விதிவிளக்கா? உணர்வுகள் பல கொண்ட மனிதர்கள் மற்றவருக்கு வலிக்குமே, அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று ஒருகணம் யோசித்தாலே போதும் உங்கள் மத்தியில் பாரிய மாற்றம் ஏற்படும்.
உங்கள் உள்ளங்களும் என் உடலைப் போல மெழுகு தான். என்னைப் போல எறிய முடியாவிட்டாலும் உங்கள் உள்ளங்களை கடினமாக்கிக் கொள்ளாது வாழப்பழகுங்கள். எப்போதும் மற்றவர்களை சந்தர்ப்பத்திற்காக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இதை நான் ஏன் சொல்கின்றேன் என்றால், உங்களுக்கு ஒளி கொடுக்கும் என்னை மற்ற நேரங்களில் நீங்கள் கண்டும் காணாதது போல் இருக்கும் போது எனக்கு ஏற்படும் வலி, நான் உருகும் போது ஏற்படும் வலியை விட கொடுமையானது.” என்றபடி உருகி முடிந்தது மெழுகுவர்த்தி.
இருள் சுழ்ந்த அந்த நொடியில் நான் உணர்ந்தேன், எத்தனை இடத்தில் நானும் இப்படி ஒரு சந்தர்ப்பவாதியாக வாழ்ந்திருக்கிறேன். அது எத்தனை பேருக்கு வலித்திருக்கும் என்று. மெழுகாய் உடலை உருக்க முடியாவிட்டாலும் உள்ளத்தை உருகச்செய்து வாழ்வோம் என்ற எண்ணத்தோடு இரவுக்கும் இருளுக்கும் விடைகொடுத்தேன்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.