இலங்கையில் கொரோனா தொற்று புதிய உச்சத்தை தொட்டது!
இன்றைய திகதிப்படி(2020-7-11) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2451ஆக காணப்படுகின்றது.
அண்மைய நாட்களில் வைரஸ் பாசிட்டிவாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்திருந்தபோதும் நேற்று முன்தினம் 60 பேர் இனம்காணப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று 297 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரையில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் 460 பேர் வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரையில் 1980ன் பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போதுவரை 11 இறப்புகள் கொரோனா காரணமாக பதிவாகியுள்ளது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்