
யாழ். இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
யாழ்ப்பாணத்தில்(Jaffna), வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது யாழ்ப்பாணம் – கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் தனது வீட்டில் தவறான முடிவை எடுத்து உயிலை மாய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மேலும் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.