கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா அவர்களின் அடுத்த கட்ட அரசியல் பாய்ச்சலுக்கான சிறப்பு அழைப்பிதழ்
கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா மருத்துவமனை ஊழலை, தவறுகளை மக்கள் நடுவில் வெளிப்படுத்திய போது அரசியல் கட்டமைப்புகள் நிலைதடுமாறியது.
நிலைதடுமாறிய அரசியல் கட்டமைப்புகள் ஒன்றிணைந்து அர்ச்சுனா இராமநாதனை முடக்கி மக்களிடத்தில் இருந்து அர்ச்சுனா இராமநாதனை விரட்டி அடிக்கத் துடித்தது.
கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா மீது தவறாக வழக்குகள் தொடுக்கப்பட்டன. மக்களுக்காக குரல் கொடுத்தவரை சிறைப்பிடிக்க வைத்தது அரசியல் கட்டமைப்புகள்.
கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா அநீதிக்கான குரலால் அரசியலில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் துரோகங்களை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.
கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா விரட்டியடிக்க துடித்த அரசியல் கட்டமைப்புக்களின் தடைகளை உடைப்பதற்கு கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா கருத்தியல் அரசியலை கையெடுத்தார்.இவர் கருத்தியல் அரசியலில் நுழையும்போது மக்களின் ஆதரவை மட்டுமே மூலதனமாக்கி அரசியலைக் கையெடுத்த வீரமறவன்.
கருத்தியல்அரசியலில் எந்தவித அரசியல் பின்புலமின்றி மக்களின் ஆதரவை நம்பி நாடாளுமன்றத்திற்கான முதல் அடியான நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கினார்.வென்றார்.கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றம் சென்ற நாளிலேயே நாடாளுமன்றத்தை அதிர வைத்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்று 40ஆண்டுகளாக தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டத்திற்கு எதிராகவும் எதிரியோடு நின்றுகொண்டு தமிழருக்கு உரிமைகள் கிடைக்கவிடாமல் தடுத்தவரும் முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு துணை நின்ற அரசியல்வாதியை வீட்டுக்கு அனுப்பிய மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்றவர் பெருந்தமிழர் கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா
தமிழ்த்தேசியத்தைப் பேசி தமிழர்களை ஏழைகளாக கையேந்தும் நிலையில் வைத்திருந்த சகல அரசியல் கட்சிகளுக்கும் உச்சிமண்டையில் அடித்து தூக்கத்தைக் கலைத்தவர் அநீதிக்கான போராளி கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா
சிங்கள நாடாளுமன்றத்தில் தமிழருக்கான சிறப்புரிமையில் தமிழ்க்கட்சிகள் சிங்கள கட்சியிடம் பிச்சையெடுத்த கடந்த கால வரலாற்றை தமிழ் சிங்கள மக்களுக்கு தோலுரித்துகாட்டிய பெருந்தமிழர் Dr..இ.அர்ச்சுனா
நாடாளுமன்ற சிறப்புரிமைக்காக எவரின் உதவியும் இன்றி கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா கருத்தியல் போரில் நேருக்கு நேராக களமாடுவது அதிஉச்ச சிறப்பாகும்.
சிங்கள நாடாளுமன்றத்தில் 27000 வாக்காளரின் தெரிவில் தமிழ்
வாக்காளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும், தமிழ்
மக்களை(தமிழ்,சிங்கள) பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்,புலம்பெயர்ந்து வாழும் தமிழ்
மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறப்புரிமையைப் பெற்றவர் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா
தனது சிறப்புரிமைக்காக தனித்தே நாடாளுமன்றத்தில் களமாடுகிறார்.ஏனைய தமிழ் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுனாவின் சிறப்புரிமைக்காக வாதாடவில்லை.
இங்கே கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா தலைமைப்பண்பு போற்றுதலுக்குரியது.
அர்ச்சுனாவின் அரசியல் முன்னெடுப்பு உண்மையும் நேர்மையுமாக முன்னெடுத்துச் செல்கிறார். அர்ச்சுனாவின் உயரிய செயல்களை தவறாகக் கட்டமைத்து அர்ச்சுனாவின் அரசியல் நெறியை முறியடிக்கத் துடிக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக அமெரிக்க சனாதிபதி ஒன்றை சொல்லும்போது அதில் பிழைஇருந்தால் கூட பின்வாங்கும் பண்பு தவிர்க்கப்படும்.இது அமெரிக்க நாட்டு மக்களின் தன்மானத்தை பெருமையை காப்பாற்றும் பண்பு.அதேபோலத்தான் கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா அரசியல்நெறியில் பின்வாங்கும் பண்பு தவிர்த்திருப்பது அர்ச்சுனாவின் சிறப்புப்பண்பாகும்.அதை தமிழர்கள் ஏற்கவேண்டும்.வரவேற்கவேண்டும்.தலைமைத்துவத்திற்கு மிக முதன்மையான பண்பாகும்.
கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனா அடுத்தகட்ட அரசியல் பாய்ச்சல் உள்ளூராட்சி தேர்தல்.இதில் அனைத்து தமிழர்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைத்திருக்கிறார்.அனைவரும் அவரின் அழைப்பை ஏற்று அவரோடு இணைந்து உள்ளூராட்சி தேர்தலில் பங்கேற்று கெளரவ Dr.இராமநாதன் அர்ச்சுனாவின் அரசியல் களத்தை நாம் வலுப்படுத்தவேண்டும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் நம் அரசியலில் மிகமுதன்மைத் தேவையாக அமைந்திருக்கிறது.ஆகவே உறவுகளே இளையவர்களே உங்களை அர்ச்சுனாவோடு இணைத்துக் கொள்ளுங்கள்.அநீதிக்கான குரலாக மாறுங்கள்.தமிழர்கள் வளமான வாழ்வு பெற்று வாழ உழைப்போம்.
Jegan Thas