எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்
எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் இன்னும் சில நாட்களில் (30ஆம் திகதி நள்ளிரவு) மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலையில் கணிசமான அளவு குறையும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நாடு பொருளாதார ரீதியில் குறிப்பிட்ட மட்டத்தை எட்டியுள்ள நிலையில் எரிபொருள் விலைக்கு சில விசேட நிவாரணங்களை மக்களுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வழக்கமான பெட்ரோல் விலை லிட்டருக்கு 20-30 ரூபாயும், வழக்கமான ஒயிட் டீசல் விலை லிட்டருக்கு 15-20 ரூபாயும் குறைக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.