தினசரி தக்காளி ஜூஸ் குடிச்சா இவ்வளவு நன்மைகளா? மாற்றங்களை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக சமையலுக்காக பயன்படுத்தும் தக்காளி சாறு, சுவை தருவதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவிச் செய்கிறது.
இதன்படி, காலையில் ஒரு கிளாஸ் ப்ரெஷ் தக்காளி ஜீஸ் குடித்தால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வழங்குவதாக கூறப்படுகின்றது.
இதை அறிந்து பலர் சக்திவாய்ந்த தக்காளி சாற்றை குடித்து வருகிறார்கள்.இப்படி தக்காளி ஜூஸ் தினமும் குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. தினமும் தக்காளி சாற்றை குடிப்பதற்கான முக்கிய காரணம் அதிலுள்ள ஆக்ஸிஜனேற்ற அளவுகள் தான். அத்துடன் தக்காளில் லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளன. இது இதய நோய்கள், வயது முதிர்வு காரணமாக ஏற்படும் நோய்கள் மற்றும் பல நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகிறது.
2. தக்காளியில் லைகோபீன், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி இருக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது. அத்துடன் NCBI இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, லைகோபீன் கரோனரி இதய நோய்களைத் தடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
3. குடல் இயக்கம் சீராக நடப்பதற்கு தக்காளி பெரிதும் உதவியாக இருக்கிறது. தினமும் ஒரு டம்ளர் தக்காளிச் சாறு குடித்து வந்தால், மலச்சிக்கல், அஜீரணம், வாயு போன்ற செரிமானப் பிரச்சனைகள் வராது. அத்துடன் உடலிலுள்ள கழிவுகள் அனைத்தும் மலத்துடன் வெளியேறும்.
4. உடலில் இயற்கையாக உருவாகும் நச்சுக்கள் உறுப்புகளைச் சுற்றி படிந்து முக்கிய செயல்பாடுகளைத் தடுக்கின்றன. இதனை வெளியேற்றும் வேலையை தக்காளி சிறப்பாக செய்கிறது. அத்துடன் நீர்ப்பிடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் வெறும் வயிற்றில் தக்காளி சாறு குடிப்பது சிறந்தது.
5 உடலில் அங்காங்கே மறைந்திருக்கும் கொலஸ்ட்ரால் தக்காளி தடம் தெரியாமல் வெளியேற்றுகிறது. தினமும் குடிப்பதால் உடல் எடையை குறைய வாய்ப்பு இருக்கிறது.
6. தக்காளி சாற்றில் பீட்டா கரோட்டின், ஜியாக்சாண்டின் மற்றும் லுடீன் உள்ளிட்ட பல பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன. இவை கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அந்த வகையில், கண்புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு போன்றவற்றை தடுக்கும்.