fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

உங்க Iphone அதிகமா சூடாகுதா? அப்போ இதையெல்லாம் பண்ணாதீங்க

பொதுவாகவே கோடை காலம் ஆரம்பித்துவிட்டால் சூழல் வெப்பநிலை சடுதியாக உயர ஆரம்பித்துவிடும்.

இவ்வாறு வெப்பநிலை அதிகரிப்பதனால் மனிதர்களின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படுவதை போன்றே இலத்திரனியல் சாதனங்களும் பாதிக்கப்படுகின்றன.அந்தவகையில் ஐபோன்கள் பயனாளர்கள் பலரும் கோடை வெயில் காரணமாக போன் அதிக வெப்பமடைவதாக தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக இவ்வாறு போன் வெப்பமடைந்தால் ஐபோனுக்கு நிரந்தர சேதம் ஏற்படுவதுடன் போன் தீப்பற்றவும் கூட வாய்ப்பு காணப்படுகின்றது. எனவே இதனை தவிர்க்க ஐபோன்கள் வெப்பமடைவதை எவ்வாறு தவர்க்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆப்பிள் நிறுவனமானது, ஐபோன்களை 0 டிகிரி முதல் 35 டிகிரி வரையிலான வெப்ப நிலையில் இயங்கும் வகையிலேயே வடிவமைத்துள்ளது.

அதைவிட அதிகமான வெப்ப நிலையில் ஐபோன்களை தொடர்ச்சியாக பாவிக்கும் பட்சத்தில்  ஐபோன்கள் சேதமடையும் வாய்ப்பு அதிகரிப்பதுடன் பேட்டரியின் ஆயுட்காலமும் குறையும். 

கோடை காலத்தில் சூழல் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருப்பதால்  ஐபோனை நேரடியாக சூரிய வெளிச்சம் படும் இடங்களில் வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

கோடை காலத்தில் ஐபோன்களை தொடர்ச்சியாக பலமணி நேரங்கள் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். போன் சூடாவதை உணர்ந்தால் உடனடியாக அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டும். 

மேலும் பேக்ரவுண்டில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து அப்ளிகேஷன்களையும் மூடிவிடுவது ஐபோன் வெப்பமடைவதை விரைவில் குறைக்கும். 

போன் அதினமாக சூடாகும் போது  ஐபோனில் ஏர்பிளேன் மோடை ஸ்விட்ச் ஆன் செய்வது அதனை மிக விரைவில் குளிர்ச்சியாக்க உதவும். 

குறிப்பாக குறைந்த சிக்னல் கொண்ட பகுதியில் ஐபோனை பயன்படுத்தும் பொழுது  ஏர்பிளேன் மோடுகளை ஸ்விட்ச் ஆன் செய்வது சாதனத்தை குளுமைப்படுத்த பெரிதும் துணைப்புரிவதுடன் பேட்டரியையும் பாதுக்க உதவுகின்றது. 

ஐபோன்களை பாதுகாக்கவும், அதனை ஸ்டைலாக காட்டிக் கொள்ளவும் பெரும்பாலானவர்கள் back cover பயன்படுத்துகின்றனர்.

இது வெப்பத்தை போனில் இருந்து வெளியேற்ற முடியாத நிலையை உருவாக்கும். ஐபோன்கள் சூடாவதை உணர்ந்தால் உடனடியாக அதன் back cover ரை கழற்றி விடுவது போனை குளிர்விக்க பெரிதும் துணைப்புரியும். 

Back to top button