fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் வரிசையில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மற்றும் நத்திங் 2a! முழு விவரம்

மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் வரிசையில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மற்றும் நத்திங் போன் 2a ஆகிய ஸ்மார்ட்போன்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் டிவைஸ்ஸில், 144Hz 3D கர்வ்ட் (curved) டிஸ்ப்ளே மற்றும் லெதர் பேக் பேனல் உடன் வருகிறது.

பிரீமியம் தோற்றத்திற்காக ஸ்லிம்மஸ்ட் பேஸில் உடன் பஞ்ச்-ஹோல் கட்அவுட் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மேல் மற்றும் கீழ் பகுதியில் ஸ்லைட்லி திக்கர் பெசல்கள் உடன், கர்வ்ட் பேனலைக் கொண்டுள்ளது. நத்திங் போன் 2a ஸ்மார்ட்போனில், பிளாட் பேனல் ஸ்கிரீன் மற்றும் ஃபேம்ட் க்ளைஃப் இன்டர்பேஸ் (famed Glyph Interface) ஆகியவற்றுடன் வருகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் FHD+ 10-பிட் பேனல் மற்றும் ஈர்க்கக்கூடிய ஸ்கிரீன் உடன் வருகிறது. மேலும், மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன், IP68 தரசான்றிதழ் கொண்ட நீர் மற்றும் தூசி எதிர்ப்பையும், நத்திங் போன் 2a, IP54 தரசான்றிதழ் கொண்ட நீர் மற்றும் தூசி எதிர்ப்புத் திறனையும் கொண்டது.

குறைந்த எடை கொண்ட செல்போன்களை வாங்க விரும்புபவர்களுக்கு எட்ஜ் 50 ஃப்யூஷன், ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில், இது வெறும் 7.9 மிமீ மற்றும் 175 கிராம் எடை கொண்டது. இது வேகன் லெதர் பினிஷ் உடன் ஹாட் பிங்க் மற்றும் மார்ஷ்மெல்லோ ப்ளூ ஆகிய வண்ணங்களில் வருகிறது. மேலும், மூன்றாவதாக பாலிமெத்தில் மெதக்ரிலேட் (polymethyl methacrylate) பினிஷ் உடன் ஃபாரஸ்ட் ப்ளூ வண்ணத்தில் வருகிறது. நத்திங் போன் 2a ஸ்மார்ட்போன், கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வழங்கப்படுகிறது, மேலும் இது ஒரு பிளாஸ்டிக் ஃரேம் மற்றும் பின் பேனலைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் நத்திங் போன் 2a, கஸ்டம் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 ப்ரோ SoC மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது. இருப்பினும், நத்திங் போன் 2a 45W ஃபாஸ்டஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, அதேசமயம், மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் 68W டர்போ பவர் ஃபாஸ்டஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

இரண்டு ஸ்மார்ட்போன்களும் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன், PDAF மற்றும் OIS ஆதரவுடன் 50-மெகாபிக்சல் Sony Lytia 700C செல்ஃபி கேமராவுடன் வருகிறது. அதனுடன், இது 13 மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது.நத்திங் போன் 2a PDAF மற்றும் OIS ஆதரவுடன் 50-மெகாபிக்சல் ISOCELL GN9 பேக் கேமராவைக் கொண்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ரூ.22,999 விலையிலும், நத்திங் போன் 2a ரூ.23,999 விலையிலும் கிடைக்கின்றது.

Back to top button