வேட்கை வேண்டும்.. விரும்புவது நடக்கும்!
எதிலுமே ஒரு பிடிப்பு இருக்க வேண்டும்.. ஒரு வேட்கை இருக்க வேண்டும். வேட்கை இல்லாத செயல்கள் எதுவுமே நிறைவேறாது.
வாழ்க்கையில் லட்சியம் தான் மனிதனுக்கு முதல் தேவை.. லட்சியம் இல்லாத, லட்சியத்தை அடையும் வேகம் இல்லாத, வேகம் காட்டாத வேட்கை இல்லாத எதையுமே நாம் எட்டிப் பிடிப்பது கஷ்டம்.. அனுபவித்தால்தான் அது தெரியும்.
வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் நமக்கு ஓர் லட்சியம் வேண்டும். நம்முடைய லட்சியத்தை அடைவதற்காக நாம் போராட வேண்டும். லட்சியம் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். உங்களின் தேடலும் அதிகமாகும். இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் உங்கள் குறிக்கோளை மட்டுமே கூர்ந்து கவனியுங்கள்.
லட்சியம் இல்லாத மனிதன் வாழ்கின்ற வாழ்வில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது. அவர்களை யாரும் மதிக்கவும் மாட்டார்கள். ஆனால் தன் லட்சியத்திற்காக பாடுபடுபவர்களை இந்த உலகம் தலையில் வைத்துக் கொண்டாடும். நம் இலக்கு என்ன என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். நாம் வாழ்வில் தேடல் அவசியம். தேடல் உள்ளவரை தான் வாழ்வு இனிக்கும். உங்கள் வாழ்வின் இலக்கை நோக்கி வெற்றி நடை போடுங்கள். தோல்வி அடைந்தாலும் இலக்கை அடைய மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். உங்களை மேம்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று சிந்தியுங்கள்.