பாடசாலைகளுக்கு விடுமுறை! மறுக்கும் கல்வி அமைச்சு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம்(22) விடுமுறை இல்லை என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், அந்த தகவல்கள் உண்மையில்லை என்று கல்வி அமைச்சு மறுப்பு வெளியிட்டுள்ளது.
எனவே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை நடைபெறவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலைமைக்கு ஏற்ப தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கே உள்ளதாக கல்வி அமைச்சின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.