கிளிநொச்சியில் கடலட்டை பண்ணையாளர்களுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கிய டக்ளஸ்
கிளிநொச்சி (Kilinochchi) பூனகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணையாளர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (20.05.2024) பகல் 10 மணிக்கு கிராஞ்சி ஶ்ரீ முருகன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கிராஞ்சி பகுதியில் அட்டைப் பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்த தெரிவு செய்யப்பட்ட 56 பயனாளிகளுக்கே இவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பண்ணையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.