இந்தியாவின் போன்பே யுபிஐ கட்டண செயல்முறை இலங்கையில் அறிமுகம்
இந்திய fintech நிறுவனத்தின் போன்பே யுபிஐ (PhonePe Unified Payments Interface) கட்டணமுறை இலங்கையில் (Sri lanka) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று(15.05.2024) நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santosh Jha) ஆகியோர் கலந்து கொண்டு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினத்திலிருந்து லங்காபேயுடன் இணைந்து இலங்கையில் UPI கட்டணத்தை ஏற்றுக்கொள்வதைச் செயற்படுத்தியதாக PhonePe அறிவித்துள்ளது.