ஜோகன்னஸ்பர்க்கில் ஏற்பட்ட தீ விபத்து : இனவெறித் தாக்குதலாக இருக்கலாம் என கண்டனம்
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள பல மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிழந்தவர்களின் சமீபத்திய எண்ணிக்கை 63 ஆக உயர்வடைந்துள்ளது.
அதன்படி, 40 க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜோகன்னஸ்பர்க் அவசர மேலாண்மை சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் முலாட்ஸி கூறுகையில்,நகரின் மத்திய வணிக மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்திலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என தெரியவந்துள்ளது.ஜோகன்னஸ்பர்க் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் குடியேறியவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கட்டிடமானது பிரபலமற்ற ஒரு நகரின் சுற்றுப்புறம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.அதன்படி, இது தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்களால் ஆவணமற்ற விதத்தில் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட கட்டிடம் என தெரியவந்துள்ளது.
மேலும், தீ விபத்தை அடுத்து, சில தென்னாப்பிரிக்கர்கள் சமூக ஊடகங்களில் இது ஒரு இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என கண்டித்து வருகின்றனர்.ஜோகன்னஸ்பர்க் தீ விபத்தில் பலியானவர்களில் பலர் கட்டிடத்தில் கட்டப்பட்டிருந்த எரியக்கூடிய குடிசை போன்ற கட்டமைப்புகளில் சிக்கியிருக்கலாம் என்று தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் வானொலி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்படி, “கட்டிடத்தின் உள்ளே எரியக்கூடிய பொருள் காணப்பட்டுள்ளது பெரும்பாலும் நீங்கள் சாதாரண குடிசையில் இருப்பதைப் போன்றது, எனவே நீங்கள் தப்பிக்க முயற்சிக்கும்போது சிக்கிக்கொள்ளும் அபாயம் அதிகம்” என தெரிவித்துள்ளார்