யாழில் சிறுமிகளிடம் பாலியல் சேஷ்டை விட்ட இளைஞர் கைது
யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் வன்புனர்விற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபர் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அண்மையில் யாழ். வைத்தியசாலையில் அதிகளவு மாத்திரைகளை உற்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அல்லைப்பிட்டியினை சேர்ந்த 11 வயது சிறுமி காப்பாற்றப்பட்டார்.