சளி, இருமல் பிரச்சனைக்கு தீர்வு
மழைகாலம் வந்துவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும். அதற்கான சிறந்த தீர்வு என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சளி, காய்சசல், இருமல் போன்ற நோய்கள் சாதாரண நாட்களில் அதாவது வெயில் காலங்களிலும் நமக்கு ஏற்படும். அதுவும் மழை காலம் வந்துவிட்டால் சளி, காய்ச்சல், இருமல் மூன்றும் நமக்கு கட்டாயமாக ஏற்படும். மேலும் அதிலிருந்து விடுபட நீண்ட நாட்கள் ஆகும். அதாவது மழைகாலம் முடிந்தாலும் நமக்கு பிடித்த சளி, காய்ச்சல் நம்மை விட்டு போகாது.
அவ்வாறு நம்மை விட்டு போகாமல் இருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த தேநீர் அருந்தலாம். அதுவும் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் தேநீரை தயார் செய்து அருந்தினால் சளி, காய்ச்சல், இருமல் குணமடையும். இந்த தேநீரை தயார் செய்யத் தேவையான பொருள்கள், எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.
இந்த தேநீரை தயார் செய்ய தேவையான பொருள்கள்…
- புதினா
- துளசி இலை
- இஞ்சி
- கெமோமில்
இந்த தேநீரை தயார் செய்யும் முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு பாத்திரம் வைத்து பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
தண்ணீர் கொதிக்கும் பொழுது அதில் துளசி இலை, புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளவும். பிறகு இஞ்சியை தட்டி இதில் போட்டுக்கொள்ளவும். பின்னர் கெமோமில் பொடியை இதில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்த பிறகு இதை இறக்கி வடிகட்டி குடிக்கும் அளவுக்கு சூடு ஆறிய பிறகு இதை குடிக்கலாம். இதில் சேர்க்கப்பட்ட துளசி இலை, புதினா இலை, இஞ்சி மூன்றும் நமக்கு ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தும். இந்த தேநீரை பருகுவதால் மூக்கடைப்பு குணமாகும். ஒவ்வாமை நோயும் இந்த தேநீரை அருந்துவதால் குணமாகும்.