fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

எதிர் கட்சி தலைவரின் சுதந்திர தின செய்தி

மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூன்று காலனித்துவ காலங்களை கடந்து 1948 பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் பெற்ற இலங்கை, இன்று முதல் எழுபத்தைந்தாவது ஆண்டை கொண்டாடுகிறது.

சுதந்திரம் பெறுவதற்கான பயணம் இரத்தமும், கண்ணீரும், வியர்வையுமான பயணமாகும் என்பதுடன், இந்த சுதந்திரத்தைப் பெறுவதற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த வீரர்களை இந்தத் தருணத்தில் மிகவும் பெருமையுடனும் மரியாதையுடனும் நினைவுகூர வேண்டும்.

அவர்களின் ஆன்மா இந்த நாட்டின் மகத்தான வரலாற்றில் வெல்ல முடியாத ஒரு குறிப்பு என்பதை நான் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர விரும்புகிறேன்.

இலங்கையர்களாக ஒன்றிணைந்து இந்த மண்ணின் சுதந்திரத்திற்காக தம்மை அர்பணித்த வரலாற்று முன்னோர்கள் என்றென்றும் நினைவு கூரப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

சுதந்திரப் போராட்டத்தை திரும்பிப் பார்க்கும்போது, ​ஒற்றுமையாக ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என்பதே வரலாறு கூறும் படிப்பினையாகும்.

ஆனாலும், இலங்கை சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் கடந்துள்ள போதிலும், பெற்ற சுதந்திரத்தை தேசிய, அங்கத்துவ, கல்வி,  மதம் என்பவற்றில் அர்த்தமுள்ளதாக்க நாம் தவறிவிட்டோம்.

ஒரு நாடு என்ற வகையில் சாதனைகள், பின்னடைவுகள் மற்றும் தோல்விகள் கடந்த 75 ஆண்டுகளாக நமக்கு அனுபவத்தை வழங்குகின்றன.

குறிப்பாக இலங்கை சமீபகாலமாக அடைந்துள்ள பொருளாதார மந்தநிலை, நாட்டின் வரலாற்றில் மிகவும் சோகமான மற்றும் பாரதூரமான நிலைமையாகும், மேலும் முறையான முற்போக்கான வேலைத்திட்டங்கள் இன்றி அதிலிருந்து மீள்வது கடினம்.

குறுகிய இனவாதம் மற்றும் வகுப்புவாதத்தில் சிக்கிக் கொள்வது உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான வழி அல்ல, உண்மையான சுதந்திரத்தை அடைய அனைவருக்கும் சம உரிமையுள்ள குடிமக்களாக நாம் ஒன்றுபட வேண்டும். அனைத்து குடிமக்களின் தேவைகளையும் சுயமரியாதையையும் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புடன், வேற்றுமையில் ஒற்றுமையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

அந்த வகையில், ஒரு காலனித்துவத்தில் இருந்து விடுபடுவது மட்டுமன்றி, இந்நாட்டு மக்கள் சாதிக்க வேண்டிய பல விடயங்களும் உள்ளன.

அதற்காக ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற உன்னத எதிர்பார்ப்புகளுடன் முழு நாட்டிற்கும் உறுதியான, பெருமைமிக்க சுதந்திர தினமாக அமைய வாழ்த்துகிறேன்.

சஜித் பிரேமதாஸ
எதிர்க்கட்சித் தலைவர்

Back to top button