மின்சாரக் கட்டண அதிகரிப்பு சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்
மின்சாரக் கட்டண அதிகரிப்பு சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆனால் அதிகரிப்பு எப்போது என்பது குறித்து இறுதித் தீர்மானமில்லை.
இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், உரிய விலைச் சூத்திரத்திற்கான முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னரே, இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கலந்துரையாடப்பட்டுள்ளது.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனை இன்று மாலை தனக்கு கிடைத்ததாக பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கட்டண அதிகரிப்பு குறித்து விசேட குழுவொன்று ஆராயவுள்ளது .