கணவனிடம் மனைவி வெறுப்பாக இருந்தால் வெளிப்படுத்தும் அறிகுறிகள்
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை எதிர்கொள்ளும் கணவன் மனைவி இருவருமே ஒருவரையொருவர் புரிது வாழ்க்கை நடத்தினால் வாழ்க்கை முழுவதும் பிரச்சனைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். இருவருக்குள்ளும் வரும் சிறு சிறு ஊடல்கள் அவ்வபோது சரியாகிவிடும் இது யதார்த்தமானது. எனினும் சில நேரங்களில் யாரேனும் ஒருவர் மற்றவர் மீது வெறுப்பை காட்டலாம். கணவனிடம் மனைவி வெறுப்பாக இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துவார் என்பதை பார்க்கலாம்.
மகிழ்ச்சியற்ற வாழ்க்கைக்கு உங்களை குறையாக சொல்லலாம்
மனைவி திருமண பந்தத்தில் அல்லது தொடர்ந்து மகிழ்ச்சியின்மைக்கு . காரணமாக கணவனை குறை கூறியபடி இருந்தால் நீங்கள் உங்களிடம் ஏதேனும் தவறு உள்ளதா என்பதை யோசிக்கவும்.
மனைவிக்கு ஏதேனும் வாக்குறுதிகளை கொடுத்து அதை தவிர்த்திருக்கீறிகளா என்பதை நினைவுப்படுத்துங்கள். இந்த கேள்விக்கான பதிலை நீங்களே தான் கண்டறியவேண்டும். பெண்கள் இதை மிக கசப்பானதாகவே எதிர்கொள்வார்கள்.
அவர்கள் உங்களிடம் பேசுவதை தவிர்க்கலாம்
தகவல் தொடர்பு இல்லாமை கூட ஒரு நபரது வெறுப்பை வெளிப்படுத்தும் அறிகுறிகளாக பார்க்கலாம். நீங்கள் மனைவியுடன் பேச முயற்சிக்கும் போதெல்லாம் அவர் உங்களை புறக்கணிக்கலாம். அல்லது நீளமான உங்கள் உரையாடலுக்கு பிறகு அவர் ஒரு வார்த்தையில் பதில் சொல்லலாம்.
குறிப்பாக உங்கள் உரையாடல் எதிலும் தலையிட விரும்பாமல் இருக்கலாம். அல்லது உங்கள் பேச்சை சுவாரஸ்யத்துடன் கேட்காமல் இருக்கலாம். உங்களிடம் பேசுவதை தவிர்க்கலாம்.
எப்போதும் சண்டையிட்டு கொண்டே இருப்பார்கள்
நீங்கள் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் உங்கள் மனைவி உங்களுடன் எதிர்மறையாக பேசிக்கொண்டிருப்பார். சிறிய விஷயங்களை கூட பூதாகரமாக்கி சண்டையிடுவார் சிறிய விஷயங்களில் சண்டை வந்தால் சில காரணங்களுக்காக அவர் உங்கள் மீது கோபமாக இருக்கலாம். அதோடு உறவில் ஆர்வத்தை இழந்திருக்கலாம்.
அன்பாக இருப்பதை தாண்டி அவர் நிதானத்தை இழப்பது உங்களுடன் இருக்கும் விரக்தியின் அறிகுறி என்பதை தொடர்ந்து உங்களிடம் சண்டையிட்டுகொண்டே இருந்தால் அவர் உங்கள் மீதான விரக்தியை இன்னும் கொண்டிருக்கிறார் என்பதை உணருங்கள்.
அவர் உங்களுடன் தூங்க மறுக்கலாம்
தாம்பத்தியம் இல்லாத நிலையிலும் உடல் நெருக்கம் விரும்பும் தம்பதியருக்கு இடையில் ஒருவருக்கொருவர் நேசிப்பும் இதில் வெளிப்படும். ஆனால் உங்கள் மனைவி உடலுறவை மறுத்தால் அவர் உங்கள் மீதான ஆர்வத்தை இழந்துவிட்டார் என்று அர்த்தம்.
சில நாட்கள் அல்லது சில வாரங்களில் அவர் சரியாக கூடும். அதே நேரம் அவர் நீண்ட காலம் ஆகியும் நெருங்கி பழக மறுத்தால் சிறிய தொடுதலில் பின்வாங்கினால் உங்கள் உறவை அவர் விரும்பவில்லை என்று சொல்லலாம்.
எப்போதும் உங்களை விமர்சிப்பார்
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்கள் மனைவியை எரிச்சலடைய செய்யும். அவர் எப்போதும் உங்களை பற்றி நன்றாக எதுவும் சொல்லவில்லை என்றால், அவர் உங்களை விரும்பவில்லை என்று அர்த்தம். அவரது விமர்சனம் ஆக்கபூர்வமானது அல்ல, அவர் உங்களை அவமானப்படுத்தும் விதமாகவே பேசலாம்.
மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டு பேசினால் இது உங்கள் மீதான வெறுப்பை நேரடியாக காட்டும் செயல் ஆகும். தொடர்ந்து நீண்ட காலம் இருந்தால் இதை நீங்கள் அவர் உங்கள் மீது திணிக்கும் அறிகுறியாகவே எண்ணலாம்.
உங்கள் மீது அக்கறையின்மையை கொண்டிருப்பார்
உங்கள் மனைவி உங்களை அன்பாக நடத்தியிருக்கலாம். ஒரு காலத்தில் மனைவி நீங்கள் மன அழுத்தத்தோடு இருந்தால் உங்களை பார்த்து எதையும் கேட்கவும் மாட்டார். உங்களுக்கு எந்த உதவியும் செய்யவும் மாட்டார். உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அவர் உங்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பார். நீங்கள் ஒருவர் இருப்பதையே மறந்து இருப்பார்.
இந்த அறிகுறிகள் சிறு சிறு ஊடல்களில் சிறிய சண்டையில் சில நாட்கள் நீடிப்பது இயல்பானது. திருமணம் முடிந்த பிறகு, குழந்தை பிறந்த பிறகு என்று உங்கள் உறவில் எத்தகைய நிலையில் இருந்தால் இவை நீண்ட நாட்கள் தொடர்ந்தால் காரணமும் அதற்கு தீர்வு காண்பதும் அவசியம்.