மருத்துவக் கல்லூரியில் நடந்த ராகிங்! மாணவர்கள் அரை நிர்வாண போஸ்!
வேலூரில் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்து கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் சி.எம்.சி மருத்துவக்கல்லூரியிலும் புதியதாக நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் ஒன்று கிடைத்தது.அந்த கடிதத்தில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
மேலும் அந்த கடிதத்தில் மருத்துவ படிப்பிற்கு புதிதாக விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.அதனையடுத்து அவர்களின் ஆடைகளை களைந்து விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைதொடர்ந்து அந்த கடிதம் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்யப்பட்டது.இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ,தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் இது போன்ற ராகிங் செயல்கள் ஒருபோதும் கல்லூரி நிர்வாகம் பொறுத்து கொள்ளாது என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நாங்கள் எவ்வாறு உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டோம் என்பதை பற்றி அவரவர்களின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.தற்போது வெளிவந்த வீடியோவில் மாணவர்கள் அரை டவுசரில் கல்லூரி தங்கும் விடுதியை சுற்றி வருகின்றனர்.அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் கடந்த ஒன்பதாம் தேதி நடந்ததாகவும் அதற்கு காரணமானவர்கள் மீதும் ,விடுதி வார்டன் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.