போதையில் சகோதரனின் மனைவியுடன் தகாத முறையில் நடந்த இளைஞர்
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மூத்த சகோதரரின் மனை வியுடன் தவறான உறவுக்கு முயற்சித்த இளைஞனைக் கைது செய்வதற்கு பொலிஸார் தேடுதலை முடுக்கியுள்ளனர்.
போதைப் பாவனைக்கு அடிமையான இளைஞன், அண்மைக்காலமாக பல பெண்களுடன் தவறாக நடக்க முற்பட்டதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தனது மூத்த சகோதரன் வீட்டில் இல்லாத வேளையில், சகோதரனின் மனைவியை மிரட்டி – அச்சுறுத்தி தவறான உறவுக்கு முயற்சித்துள்ளார்.
இருப்பினும் அவர் சாதுரியமாக தடுத்து இது தொடர்பில் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
பொலிஸார் சம்பந்தப்பட்ட இளைஞனைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.