வகுப்பறையில் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் ரணியில் அரசு பள்ளியில் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. அங்கு செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிபவர் கிறிஸ்து தாஸ். இவர் பள்ளியில் பாடம் நடத்தும் போது மாணவ மாணவிகள் மத்தியில் ஆபாசமாக பேசுவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் இது குறித்து சில மாணவிகளின் பெற்றோர் குமரி மாவட்டம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர் அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது .பின்னர் அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
அவரை சிறையில் அடைக்க கொண்டு செல்லும் போது உடல்நலம் சரியில்லை எனக் கூறி ஆசிரியர் கிறிஸ்துதாஸ் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது இதற்கிடையில் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கல்வித்துறை உத்தரவிட்டது.