fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

குண்டா இருக்கிறவங்க இதை மட்டும் செய்யவே கூடாது

நீங்கள் உடலின் மூலமாகவோ அல்லது உடற்பயிற்சியின் மூலமாக உடல் எடையை குறைத்தே தீரவேண்டும் என்று முடிவு செய்துள்ளீர்களா? அது மிகவும் நல்ல விஷயம் தான். உங்கள் வாழ்வில் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.இதற்காக நீங்கள் தினமும் உங்களின் நேரத்தை ஒதுக்கி அதற்கான முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றீர்கள். அப்படியென்றால் விரைவில் உங்களுக்கு பலன் கிடைக்கப் போவது உறுதி. ஆனால் உடல் எடை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் ஒரு தவறு செய்கின்றனர்.

இதற்கான முயற்சிகளை செய்து ஒன்று அல்லது இரண்டு நாட்களிலேயே பலன் கான வேண்டும் என்று ஆசை கொள்கின்றனர்.மேலும் இதற்கான சாத்தியம் ரொம்ப குறைவு தான். இப்படி நடக்கும் பொழுது அவர்கள் மன வளர்ச்சி அடைகின்றனர்.உடல் எடையை குறைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து கொண்டே இருக்கும் போது பாதியிலேயே பயிற்சியை விட்டு விடுகின்றனர். இது மிக மிக தவறான செயல்களாகும். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் நிச்சயம் பலனளிக்கும் என்று முதலில் நீங்கள் நம்ப வேண்டும். உடல் எடை குறைய சில காலம் தேவைப்படும். மேலும் முயற்சி செய்தால்

படிப்படியாக உடல் எடையைத் குறையத் தொடங்கும். அதுவரையும் நம் முன் வைத்த காலை எந்த சூழலிலும் பின் வைக்கக் கூடாது. தொடர்ந்து முயற்சி செய்தால் அதற்கான பலனை விரைவில் அளிக்கும் என்பார்கள். இந்த எண்ணத்தை ஆழமாக மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியே உங்கள் எடை குறைந்து நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறோம்.

Back to top button