அண்மை காலத்தில் விவாகரத்துகள் அதிகரிக்க காரணம் என்ன?
இதற்கு வாழ்க்கையின் மதிப்புகள் மாறுவது ஒரு முக்கிய காரணம்..
தனிமனித சுதந்திரமும் , மகிழ்ச்சியும் , குடும்பம் நடத்துவதில் உள்ள அர்ப்பணிப்பு , குழந்தை வளர்ப்பிலுள்ள சிரமம் இவற்றைக் காட்டிலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கி விட்டது…
பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்ததில் அவர்கள் பணத்துக்காக கணவனை சார்ந்திருக்கும் நிலைமை மாறிவிட்டது…
சுதந்திரமாக வாழ முடியும் என்ற தைரியமும் , தன்னம்பிக்கையும் அவர்களை சுயமாக முடிவெடுக்க தூண்டுகிறது…
திருமண சட்ட திருத்தங்களும் விவாகரத்தை எளிதாக்குகின்றது.
இதனால் திருமணம் முன்போல் ஒரு பிரிக்கமுடியாத பந்தமாக சமூகம் நினைப்பதில்லை..
அதனால் வீட்டிலும் , வெளியிலும் இதற்கு அதிக அளவு எதிர்ப்பும் குறைந்து வருகிறது….
கணவன் மனைவி இருவரின் ஒப்புதல் பேரில் , நீதிமன்றம் போகாமலேயே எளிதாக விவாகரத்து பெறுவதற்கும் சட்டம் வழி செய்கிறது…..
பெற்றோரின் விவாகரத்து குழந்தைகளை எந்த வயதில் அதிகம் பாதிக்கின்றது….?????
எந்த வயதானாலும் விவாகரத்து நிச்சயமாக குழந்தைகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்…
ஆனாலும் உளவியலாளர்கள் கருத்துப்படி , சிறிய வயதில் பாதிப்பு அதிகமாக இருக்கும்….உடனே அதன் விளைவுகளை கண்கூடாகப் பார்க்கலாம்..
ஆனால் போகப் போக, தனது நிலைமையை உணர்ந்து கொண்டு அதற்கேற்ப தனது மனநிலையை தயார் செய்து கொண்டு விடுவார்கள்….
சமீப காலம் வரை வளர்ந்த குழந்தைகள் விவாகரத்தின் விளைவுகளை சீக்கிரம் பழகிக் கொள்வார்கள் என்ற கருத்து நிலவியது…
ஆனால் தற்போது பெற்றோர்களின் வழிகாட்டலை அதிகம் எதிர்பார்க்கும் பதின் பருவத்தினர்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்..
கணவன் மனைவி இருவரும் தமது வாழ்க்கையை மட்டுமே அதிகம் நினைத்து கவலைப்படுவதால் , அவர்களால் தமது டீன்ஏஜ் குழந்தைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க முடிவதில்லை…
வீட்டின் நிதி நிலைமை குழந்தைகளை பகுதி நேர வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்துகிறது..
தனித்து வாழும் பெற்றோருக்கு மனதளவில் உறுதுணையாக இருக்க வேண்டிய அவசியத்தால் , வளரிளம் பருவத்தினருக்கு தமது விருப்பமுள்ள வாழ்க்கையை அமைத்துக் கொள்வதிலும் தாமதம் ஏற்படுகிறது..
இதனால் கூடுதல் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சிறுவர் சிறுமியர் புகைபிடித்தல் , மது மற்றும் போதை மருந்துகள் உபயோகித்தல் ஆகிய தீய பழக்கங்களுக்கும் ஆளாக நேரிடும்…
அதற்கு மாறாக , சிறிய வயதில் இதை அனுபவிக்கும் குழந்தைகள் டீன்ஏஜ் வரும்போது , ஒருவாறு சூழ்நிலைக்கேற்ப தம்மை தயார் செய்து கொண்டு விடுவார்கள்..
விவாகரத்துக்குப்பின் பெற்றோர்கள் இருவருக்கும் குழந்தையின் பாதுகாப்பில் சமபங்கு இருப்பது சிறந்ததா?
இருவரின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகள் , வாரத்தில் பாதி நேரம் தனித்தனியாக இருவருடன் நேரம் செலவிட வேண்டியிருக்கும்….
சட்டவல்லுனர்கள் இந்த ஏற்பாட்டை வரவேற்கின்றனர்..
இல்லாவிட்டால் பொதுவாக வயது வரும்வரை , சிறிய குழந்தைகள் தாயுடன் இருக்க வேண்டும். விடுமுறையில் அல்லது வாரக்கடைசிகளில் தந்தையுடன் நேரத்தை செலவழிப்பது வழக்கம்…
இருவருக்கும் சமபங்கு உரிமை இருப்பின் தந்தையின் அரவணைப்பும் அன்பும் தொடர்ந்து கிடைப்பது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்….
ஆனால் உளவியல் ஆலோசகர் ஜுடித் வாலர் இதற்கு எதிர்மறை கருத்தை முன்வைக்கிறார்..
தாயுடன் தொடர்ந்து தங்க முடியாத காரணத்தால் தாய் சேய் பந்தம் மிகவும் உறுதியாக இருப்பதில்லை.. தாயின் வழிகாட்டுதல் முழு அளவில் கிடைப்பதில்லை..
கணவன் மனைவியரிடையே மிகுந்த வெறுப்பும் , கோபமும் இருப்பின், இவை மாறி மாறி தங்கும் போது ஊதி பெரிதாக்கப்பட நேரிடலாம்.
அதுவே நண்பர்களாய் பிரிந்த பெற்றோர்கள் இருவருமே குழந்தையை சம அளவில் நேசிப்பதால் இத்தகைய எதிர்மறை எண்ணங்களை குழந்தைகள் மனதில் தோற்றுவிப்பதில்லை…..
வீட்டை விட்டு ஓடும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும். ???
சில குழந்தைகள் தமது சுயவிருப்பத்துடன் வாழ தீர்மானித்து திடீரென வீட்டைவிட்டு சொல்லாமல் ஓடி விடுவதுண்டு.. ஆனால் சிலநாட்களில் திரும்பி விடுவதுண்டு..
வேறு சிலர் வீட்டில் தனக்கு இழைக்கப்படும் அநீதிகளிலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு நிரந்தரமாக ஓடிவிடுவார்கள்….
அவர்கள் நினப்பதற்கு மாறாக வெளியில் அவர்கள் சந்திக்கும் கொடுமைகள் அதைவிட அதிகம்…
இவர்களுடைய எதிர்காலம் மிகவும் பரிதாபத்துக்குரியது..
கட்டாய பாலுறவுகளும் , திருட்டு , பிச்சையெடுத்தல் , போதை , மது பழக்கங்களும் இவர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது..
இதிலிருந்து மீண்டு வரும் குழந்தைகள் வெகு சிலரே…