நாளைமுதல் பேருந்து கட்டணம் 35 சதவீதத்தினால் அதிகரிக்கின்றது?
நாளைமுதல் பேருந்து கட்டணத்தை 35 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை முதலாம் திகதி வருடாந்த கட்டண திருத்தத்தை கருத்தில் கொண்டு, பேருந்து கட்டணத்தை 35 சதவீதத்தினாலும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் அதிகரிக்குமாறு சங்கம் வலியுறுத்தியுள்ளது.