பிரான்சில் மீண்டும் கொரோனா தீவிரம்
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று வீழ்ச்சியைத் தொடர்ந்து சுகாதாரக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன இந்நிலையில் தற்போது மீண்டும் கொவிட் 19 வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 100,000 பேர் வரை தொற்றுக்குள்ளாவதாக தெரியவந்துள்ளது.
மே மாத ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு 25,000 பேருக்கு தொற்று ஏற்பட்டது. கடந்த வாரம் நாள் ஒன்றில் பதிவான தொற்று எண்ணிக்கை 40,000 ஆக இருந்தது.
இந்நிலையில் நேற்று வியாழனன்று வெளியான தகவல்களின்படி கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 95,217 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலை தொடருமானால் அடுத்து வரும் சில நாட்ட்களிலேயே நாளொன்றுக்கு 100,000 இற்கு அதிகமானவர்கள் தொற்றுக்குள்ளாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த சில வாரங்களாக PCR, Antigen போன்ற கொரோனா வைரஸ் பரிசோதனைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த வாரத்தில் மொத்தமாக 1,232,600 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின.