அரச ஊழியர்களுக்கு 5 வருடம் வெளிநாட்டு விடுமுறைக்கு அனுமதி
அரச ஊழியர்களின் சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், எதிர்வரும் 5 வருட காலத்திற்கு சம்பளம் பெற்றுக்கொள்ளாது, அரச ஊழியர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வகையில், சட்ட திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு செல்ல இதனூடாக சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.