
யாழ்.நல்லுார் கோவில் வீதியில் தகாத நடத்தையில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் உட்பட 6 பேர் கைது!
யாழ்.நல்லுார் கோவில் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் சமூக பிறழ்வு நடத்தையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் 2 பெண்களையும், 3 ஆண்களையும் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விடுதி உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று முற்பகல் முன்னெடுத்த விடுதி முற்றுகையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
நல்லூர் – கோவில் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்தன. அதுதொடர்பில் விடுதியைச் சோதனையிடுவதற்கான அனுமதி யாழ்.நீதிவான் நீதிமன்றில் பெறப்பட்டது.
இன்று முற்பகல் விடுதியைச் சோதனையிட்ட போது மாறுபட்ட தகவல்களை வழங்கிய இளைஞர்கள் மூவரும் இரண்டு இளம் பெண்களும் அங்கு இருந்தனர். விடுதி உரிமையாளரும் மாறுபட்ட தகவல்களை வழங்கினார்.
அதனால் அவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். குருநகர் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த 21,24 வயதுடைய இளம் பெண்களே கைது செய்யப்பட்டனர். இளைஞர்களில் ஒருவர் உரும்பிராயைச் சேர்ந்தவர் ஏனைய இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள். எனவும் சந்தேக நபர்கள் 6 பேரும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.