
யாழ்ப்பாணத்தில் 5000 ரூபா நிவாரண பொதி விநியோகம்!
சுயதனிமைப்படுத்தப் பட்டுள்ள குடும்பங்களுக்கான 5000 ரூபா நிவாரணப் பொதி நாளையிலிருந்து விநியோகிக்கப்பட வுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க,மகேசன் தெரிவித்தார்
கொரோனா தொற்று பரவல் அச்சத்தின் காரணமாக சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு அரசினால் இடர் கால நிவாரணமாக 5000 ரூபா பெறுமதியான,
உணவு பொதிகள் நாளையதினத்திலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் விநியோகிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ்ப்பாண குடாநாட்டில் கொரோனா தொற்றுக்கு ள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணியதன் அடிப்படையில்,
மற்றும் தொற்றுக்குள்ளானவர்கள் பயணித்த பேருந்து வண்டிகளில் பயணம் செய்ததன் அடிப்படையில் இன்றைய தின தரவின்படி 772 குடும்பத்தைச்சேர்ந்த 1700 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்
சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் நாடுபூராகவும் வழங்கப்பட்டு வரும் நிலையில்,
யாழ் மாவட்டத்திற்கான இடர் கால நிவாரண பொதிகள் நாளைய தினத்திலிருந்து அந்தந்த கிராம சேவகர்கள் ஊடாக தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.
யாழ் மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரின் தரவுகள் கடந்த 1 ம் திகதி உரிய செயலணிக்கு அனுப்பப்பட்டு 2ம் திகதி அதற்கான அனுமதி கிடைத்துள்ளது .
எனவே முதற்கட்டமாக யாழ் மாவட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் சுயதனிமைப்படுத்தலில் உள்ள 509 குடும்பங்களுக்கு நாளைய தினத்திலிருந்து அந்தந்த பிரதேச செயலகப் பிரிவுகளில் கிராமசேவகர் ஊடாக நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.